அலை மீது கோபம் கொண்டு
கடலிடம் அமைதி அடைந்து
மலையுடன் உரையாடி
கொடியுடன் உறவாடி
அனலாக கொலுத்தி
குளிராக வருத்தி
வேர்வையை விரட்டி
புயலென மிரட்டி
மழையில் நனைந்து
மண் வாசம் அணிந்து
குழலின் துளை புகுந்து
இன்னிசையாக செவி சேர்ந்து
அவள் இடம் பிரிந்து
என் உயிர் சேர்ந்து
ஆனந்தம் கொடுத்த
மழலை தென்றலே
இன்று உன்னை சுவாசித்தேன்
நான் உன்னை மட்டும் நேசித்தேன்
No comments:
Post a Comment